டயகம நகரில் புதிதாக மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டளனர்.
பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.