மத்திய வங்கி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று, (09) கருத்து வெளியிடும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை கூறினார்.