மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான குழு ஒன்றின் தலைவர் உள்ளிட்ட குழுவை லண்டன் மாநகர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நேற்று (06) நடைபெற்றதுடன், மன்னராட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் சார்லஸ் மன்னன் தங்களுடைய அரசன் அல்ல என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீதியை மறித்து போராட்டம் நடத்தியதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.