( வாஸ் கூஞ்ஞ)

-மன்னாரில் இடம்பெற்று வரும் சுற்று சூழலை அழிப்பதற்கு எதிராக தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு ஊடகங்கள் மூலம் அழைப்ப விடுத்துள்ளார்.

-மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செபமாலை அன்ரன் அடிகளார் தலைமையில் வாழ்வுதயத்தில் திங்கள் கிழமை (09) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தை பாதுகாத்தல் என்ற விடயத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டிய கடற்பாடு எனக்கு உண்டு.

கறிற்றாஸ் வாழ்லுதயம் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.

இதன் செயல்பாடுகளில் ஒன்றாக இயற்கை வளத்தை பாதுகாப்பதும் ஒன்றாகும்

கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனமானது ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்’ எனும் திட்டத்தினை கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தி  வருகின்றது.

இக்காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளச் சுறண்டல்கள், இயற்கைவள அழிப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக பல அதிகாரிகளின் கவனத்திற்கும் துரித செயற்பாடுகளுக்கும் கொண்டுவருவதோடு மக்களுக்கு இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளதை உணர்ந்தபடியினாலேயே இந்த ஊடகச் சந்திப்பானது உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது.

இப் பூமியானது நாம் அனைவரும் வாழ்வதற்கான பொது இல்லம். ஆகவே, நாம் எமது முன்னோரிடமிருந்து எவ்வாறு வளத்தோடும். செழிப்போடும் இந்த இயற்கை வளங்களைப் பெற்றுக் கொண்டோமோ அவ்வாறே நமது நாளைய தலைமுறையிடம் கையளிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது,

இதனாhல் குறிப்பிட்ட நபர்கள் இதனை அபகரிப்பதும், அழிப்பதும் குற்றமாகும் என்பதுடன் இவற்றை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தலான முக்கிய விடயங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கனியவள அகழ்வு, காற்றாலைத்திட்டம், சட்டவிரோத மண்ணகழ்வு, இந்திய இழுவைப் படகுகளில் அத்துமீறிய நுழைவு, காடழிப்பு, கடலோர கண்டல் தாவரங்கள் அழிப்பு, வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சொந்தமான காணிகள் தனிநபர்களினால் அபகரிக்கப்படுதல் என்பனவாகும்.

இவற்றினால் நாம் எதிர்நோக்கும் பாரிய விளைவுகள், பேரழிவுகள் பற்றி மக்கள் தெளிவடைய வேண்டும், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புடைய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுகின்றோம்.

இயற்கையைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும்  அனைத்து நடவடிக்கைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பு இருக்குமென கூறிக்கொள்கின்றோம் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *