அஸ்ரப் அலீ
மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மன்னார் – அடம்பன் – முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 46 மற்றும் 53 வயதுடைய பள்ளிமடு, உளியன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொலையாளிகள், மற்றும் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.