நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார்.
குறிப்பாக கடந்த பத்து வருடங்களை பின்னோக்கிப் பார்க்கும் போது நாட்டில் மருந்துகளின் தேவை 100/% பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், குறிப்பிட்ட அளவு மருந்துப் பற்றாக்குறை எப்போதும் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.