அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் கடற்கரையில் இலங்கை இளைஞருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சடலம் 18-25 வயதுடைய இளைஞராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மருத்துவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.