ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.
இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது.
முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் நோன்பு பெருநாள் பண்டிகையை 22.04.2023 அன்று விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
அந்தவகையில் அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட நோன்பு பெருநாள் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
பிறகு தமது பண்டிகையை மூஸ்லீம் மக்கள் சந்தோஷமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.