மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), உறுதியளித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானைஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
அமைச்சர் ஜீவனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பாக அவரது முகநூலில் கூறியதாவது
இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது, மலையக பெருந்தோட்ட சமூகங்களின் நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவு வழங்கப்படும் என JICA பிரதிநிதிகள் சந்திப்பில் உறுதியளித்தனர்.என குறிப்பிட்டுள்ளார்.