(நூரளை ரமணன்)
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்று திரள்வோம். ஐக்கிய மலையக மா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
மலையக இந்தியவம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் தங்களுகென ஒரு முகவரி இல்லாமல் வாழும் சூழ்நிலையிலே இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.நாம் 200 வருடங்கள்
கடந்து விட்டோம் என மார்பு தட்டிக்கொண்டு பல நிகழ்வுகள் நடத்துவதில் எமது மக்களுக்கு முகவரி கிடைத்து விடாது. அவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து விடாது.
என ஐக்கிய மலையக மா மன்றத்தின் தலைவர் ஏ. பீ. சுரேஷ் விடுத்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று தொழிலாளர்களுக்கு முறையாக தொழிலோ முறையான சம்பளமோ தோட்ட நிர்வாகங்கள் வழங்கு வதில்லை.தொழிலாளர்களில் அதிகமானோர் இன்று வயிற்று பசிக்காக வெளியில் தொழில் தேடி செல்கின்றார்கள்.தோட்டங்களில் தொழில்செய்யாத தொழிலாளர் களின் வீடுகளை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொள்ள முற்படுகின்றனர்.
தோட்ட நிர்வாகங்கள் சர்வாதிகார திமிரில் செயல்படுகின்றனர். இதனை தொழிற்சங்க அரசியல் தலைமைகள் கண்டும் காணாதது போல செயல்படுகிறனர்.இது சம்பந்தமாக தொடர்ந்தும் நாம் தொழிற்சங்க அரசியல் தலைமைகள், அரசியல்வாதிகள் ,அரசியல் கட்சிகளை குறை கூறாமல் அவர்களிடத்தில் இருக்கும் குறைகளை நாம் தேடிகொண்டிருக் காமல் எமது சமூகத்தின் மீது அக்கரையுள்ள சமூக சிந்தனையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிகால சந்ததியினருக்கு ஒரு வழி காட்டியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இந்த நாட்டில் நடைபெற்ற தேர்தல் மேடைகளில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் அரசியல் வாதிகளால் செய்துவிட முடியாது. செய்வுமில்லை. இன்றைய மலையக இளைஞர் சமூகம்சிந்தித்து செயல்பட கூடிய சமூகமாக மாறிவருகின்றது .
எனவே இந்த நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை மக்களும் ஒண்றிணைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இன்று இருக்கின்றோம். அதற்கான ஒரு அடித்தளத்தை வெகு சீக்கிரத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
நிச்சயமாக எமது சமூகம் கால காலமாக கொத்தடிமைகளாகவும் பகடகாய்களாகவும் அரசியல் வாதிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய அரசியல் வியாபாரத்தை சிறந்த முறையில் எடுத்து செல்கின்றார்கள்.இதனை தட்டிகேட்க எமது இளைஞர் சமூகம் ஒண்றிணைய வேண்டும்.இன்று எமது இளைய மலையக சமூகம் கல்வி, கலை கலாச்சாரம் விளையாட்டு துறைகளில் முன்னேற்றமடைந்து வருகின்றார்கள் அவர்களுக்கென ஒரு முகவரி பெற்றுக்கொடுக்க வேண்டும். எண்ணத்தில் ஐக்கிய மலையக மா மன்றம் செயல்பட்டு வருகின்றது.
எனவே எமது சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு மலையக சமூக ஆய்வாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக சிந்னையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். என அவ்வறிக்கையில் சுரேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.