மலையகத்திற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹில கோட்டே ரயில் நிலையத்திற்கும் பாலான்ன ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரமொன்று சரிந்து விழுந்துள்ளது.
அதனால் மலையக ரயில் சேவை தடங்கலாகி இருக்கிறது.
மரத்தை அகற்றும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவினர் கூறுகின்றனர்.