பாடசாலை விடுமுறை முடிந்து சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது வழமையாக காணப்படுவதால், நீரிழப்பைத் தவிர்க்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்த நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில் குழந்தைகளுக்கு இயற்கையான திரவங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் குடிக்கக் கொடுக்க வேண்டும் என்று டொக்டர் தீபால் கூறினார்.