சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்படுவதால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியளவில் சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“ஓகஸ்ட் 16ஆம் திகதியளவில் சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்து மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும். இது முற்றாக நிறுத்தப்பட்ட பின்னர், மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் மாத்தறை, காலி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூன்று மணி நேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும். பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம். எனவே நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். மின்சாரத்தை துண்டிக்க முடியாது. கடந்த மார்ச் மாதத்திலும் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு எனக்கு தேவைப்படலாம் என்று. அந்த அனுமதியைப் பயன்படுத்தியாவது எமக்கு மின்சாரத்தை வாங்குவது அவசியமாகும் என்று.  அந்த மின்சாரத்தை வாங்குவதனால் எமது நாட்டில்  மூன்று மின் உற்பத்தி நிலையங்களே உள்ளன. இந்த மூவரிடமிருந்தே நாம் அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை விடுவிக்காவிட்டால் மின் உற்பத்திக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஓகஸ்ட் 15 முதல் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத்தை வாங்க வேண்டும். கொள்முதலில் அதைச் செய்ய நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.”

என கூறினார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *