மியன்மாரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மோச்சா’ புயல் உலுக்கியெடுத்தது.
அங்கு ‘மோச்சா’ புயலுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை தற்போது 81 ஆக உயா்ந்துள்ளது.
வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோச்சா’ புயல் மியன்மாரில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது.
இதன்போது, மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதில், ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கா் கிராமங்களில் மட்டும் 41 போ் பலியாகினா்.
இந்த பகுதியில்தான் மியன்மார் அரசால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை ரோஹிஞ்யா முஸ்லிம் இனத்தவா்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், புயல் காரணமாக பலியானோா் எண்ணிக்கை 81-ஆக உயா்ந்துள்ளது. மேலும் பலர் காணாமற்போயுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.