மியான்மர் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாட்டின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தலைவர் யாங்கூனில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவப் பிரிவினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.