ராமு தனராஜா
மலையகத்தில் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக மது சாலைகளால் மலையக சமூகம் திண்டாடுகிறது
இந்த நேரத்தில் பதுளை பசறை 10ம் கட்டையில் புதிய மதுவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஆயத்தப் பணிகள் நடக்கின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகம் 200 இல் ஏதாவது நல்லது நடக்காதா என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நேரத்தில் மேலும் புதிதாக சாராயக் கடைகள் திறப்பதற்கான தேவைகள்தான் என்ன இதனால் பெரும் புள்ளிகளுக்கே இலாபம்.
பதுளை பசறை பத்தாம் கட்டையில் திறக்கப்பட இருக்கும் மதுவகத்தை அண்மித்த பகுதியில் பிரதான பாடசாலை அமைந்துள்ளது
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இந்த வழியாகத்தான் பாடசாலை செல்ல வேண்டும்
அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாதிகளே உண்மையில் உங்களுக்கு கண் தெரியவில்லையா மலையக பகுதிகளில் மேலும் மேலுபுதிதாக மதுசாலைகளை திறக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் ??
மக்களின் பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வியலை சீரழிக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது எதற்காக சிறுவர்கள் சிறுமியர் பெண்கள் இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களையும் பாதிக்கவல்ல இந்த புதிய சாரயக்கடை திறப்புக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காது மௌனம் காப்பது ஏனோ..??
இந்த மதுவகம் திறப்புக்கு எதிராக பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள் அதில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பங்கேற்றார் இனிவரும் நாட்களில் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் தொடரும் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
மலையக மக்களின் அமைதியான வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த மதுவகத்தை திறக்க விடாது தடுக்க வேண்டும் என்றும் உரிய அரச அதிகாரிகளிடமும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் பிரமுகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்போடு பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.