கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கூட்டெழுத்து கற்பித்தல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.
கடந்த காலங்களில் கூட்டெழுத்து எழுதுவது தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலை பாடத் திட்டத்தில் கூட்டெழுத்து எழுதுவதற்கு கற்பிக்கப்பட உள்ளது.
கூட்டெழுத்து எழுதுதல் மாணவர்களின் கையெழுத்து போடுவதற்கான பயிற்சி மட்டுமல்ல என கல்வி அமைச்சர் ஸ்டீவன் லீஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டெழுத்து பயிற்சியானது இளையர்களின் பல்வேறு ஆற்றல் திறன்களை விருத்தி செய்யக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த தலைமுறையினர் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.