இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது
நான் மிகவும் நேசித்த ஒன்றைப் பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
நான் நேசித்தது மலைகளையா? கடல்களையா? ஒரு நபரையா? மக்களையா? அல்லது கொள்கைகளை நேசித்தேனா? என்று தெரிந்து கொள்ள எண்ணினேன்.
நடைபயணத்தை தொடங்கும்போது மிக எளிதாக இருக்கும் என்று நினைத்து தொடங்கினேன்.
ஆனால் சில நாட்களில் எனது முழங்காலில் நீண்ட நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமானது. எனது மருத்துவரும் எங்களுடன் வந்தார்.