2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ (LSG) அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி.அபார வெற்றிபெற்றுள்ளது
183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் சரிந்தது.
லக்னோ அணிக்கு ஆறுதலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்திருந்தார். அவரும் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆக ஆட்டம் மெல்ல மெல்ல மும்பை இந்தியன்ஸ் வசம் சென்றது. 15வது ஓவரில் லக்னோ 100 ரன்களை தொட்ட சமயத்தில் 9 விக்கெட்டை இழந்தது. சில நிமிடங்களில் 101 ரன்கள் எடுத்த கையோடு ஆல் அவுட் ஆனது.
இன்றைய போட்டியில் லக்னோ தரப்பில் மொத்தம் மூன்றுபேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களைச் சேர்த்தனர். தீபக் ஹூடாவும் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இறுதியில் லக்னோ 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்களை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.