இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையிலான 5 போட்டிகளை கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டிரினாடாட் பிரையன் லாரா விளையட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி தனது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதில் அணித்தலைவர் ரோவமன் பவுல் 48 ஓட்டங்களையும் நிக்லஸ் பூரன் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சௌவால் இரண்டு விக்கட்டுகளை 24 ஓட்டங்களை கொடுத்து கைப்பற்றினார்.
வெற்றி இலக்கான 150 ஓட்டங்களை இந்தியா இலகுவாக பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் ஜேஸன் ஹோல்டரின் துல்லியமான பந்தில் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தனர்.
ஹோல்டர் தனது 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவானார்.
9
இந்திய அணி தனது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்று தோல்வியை 4 ஓட்டங்களால் தழுவியது.
இந்திய அணி சார்பாக திலக் வர்மா 39 ஓட்டங்களை பெற்றார்.
அடுத்த போட்டி 6 ஆம் திகதி இடம்பெறும்.