உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாபேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அவர்கள் ‘காத்திருப்பு விருப்பங்கள்’ அல்லது வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அணியில் சேர்க்க அனுப்பப்படுகிறார்கள் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதன்படி, டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைய உள்ளனர்.