‘செய்தி புயல்” அஸ்ரப் அலீ
யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றை அகற்றும் தீர்மானம் தொடர்பில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர்
யாழ்ப்பாணம், கற்கோவளம் அருகே அமைந்துள்ள சிங்க ரெஜிமண்ட் படைப்பிரிவின் முகாம் ஒன்றை எதிர்வரும் நாட்களில் அகற்றிக் கொள்ள படைத்தரப்பு தீர்மானித்துள்ளது
இந்நிலையில் குறித்த செய்தி அறிந்து பிரதேசவாசிகள் முகாம் நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ராணுவத்தினர் இருக்கும் வரையே தாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ராணுவ முகாம் அகற்றப்படக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராணுவ முகாம் அகற்றப்படுவதற்கு எதிராக பிரதேசவாசிகள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றையும் முகாம் அதிகாரிகளிடம் பிரதேசவாசிகள் கையளித்துள்ளனர்.