(ஏறாவூர் சாதிக் அகமட் )
பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தேசிய மட்டத்தில் நடாத்தும் பாடசாலை மட்ட DIVISION – 01 உதைப்பந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள அலிகார் தேசிய பாடசாலை அணி தனது இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணியை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்கொண்டதுடன், யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணிக்கு முதல் போட்டியாகவும் அமைந்தது.
பலம்வாய்ந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட விறுவிறுப்பான இப்போட்டி உதைப்பந்தாட்ட ரசியர்களுக்கு சுவாரஸ்யமான போட்டியாக அமைந்திருந்ததுடன், 06 : 04 எனும் கோல்கள் கணக்கில் அலிகார் தேசிய பாடசாலை அணி வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டது.