புத்தூர் – கந்தரோடை வீதியின் சுன்னாகம் சந்தி தொடக்கம் மாகியப்பிட்டி சந்தி வரையான பகுதியின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமான கவனிப்பாரற்று காணப்பட்டிருந்த பெரும்பாலான வீதிகளின் புனரமைப்பு பணிகள், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமா அங்கஜன் இராமநாதன் அவர்களது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி,
யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி,
புத்தூர் – சுன்னாகம் கந்தரோடை வீதி,
மாவடி 3ம் வீதி, வல்லை – உடுப்பிட்டி வீதி உள்ளிட்ட பல வீதிகள் இவ்வாறு அங்கஜன் இராமநாதன் MP அவர்களது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பின்னர் 2022 இல் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வீதிகளின் அபிவிருத்தி பணிகள் தற்போது படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புத்தூர் – கந்தரோடை வீதியின் சுன்னாகம் சந்தி தொடக்கம் மாகியப்பிட்டி சந்தி வரையான பகுதியின் புனரமைப்பு பணிகள் தற்போது துரிக கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று மக்கள் பயன்பாட்டுக்கான முன்னுரிமை அடிப்படையில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி, புத்தூர் – சுன்னாகம் வீதி, மாவடி 3ம் வீதி, வல்லை – உடுப்பிட்டி வீதி உள்ளிட்ட ஏனைய வீதிகளும் மக்கள் பாவைனைக்கு ஏற்ற வகையில் புனரமைப்பு செய்யும் பணிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.