(அஷ்ரப் ஏ சமத்)
ரத்மலானை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு கடந்த வருடம்2022 ல் வக்பு சபையினால் 7 பேர் கொண்ட ஒர் சிறந்த நிருவாக சபை நியமிக்கப்பட்டு அச் சபை கடந்த ஒர் வருடமாக சிறப்பாக இயங்கிவந்தது.
அந்தச் சபை இருக்கத்தக்க அரசியல்வாதிகளின் பலத்துடன் மேலும் ஒரு சபை நியமிககப்பட்டு கடந்த வாரம் இன்னும் ஒரு நிருவாக சபையை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலகப் பணிப்பாளர் கையொப்பமிட்டு 5 பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்..
மேற்படி நியமனக் கடிதம் ஒன்று அங்கு பள்ளிவாசலில் கடந்த 14.09.2023 விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ..இவ் புதிய நிர்வாக சபை உறுப்பிணர்களது நியமனம் சம்பந்தமாக ரத்மலானை ஜூம்ஆப் பள்ளிவாசலின் முஸ்லிம் பிரதேச வாசிகள் 16ஆம் திகதி சனிக்கிழமை ஊடகங்களில் தமது எதிர்ப்புக் கருத்துக்களைத் ஊடகங்கள் முன் வந்து தெரிவித்தனர்..
இச் சபை அரசியல் செல்வாக்கினால் திடிரென இங்கு வந்துள்ளது. இதில் 05 பேர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன…..இவர்கள் ரத்மலானை பிரதேசத்தில் வாழும்பவர்கள் அல்லர்… இவர்கள் பள்ளிவாசலுக்கு மாதந்த சந்தாப் பணம் செலுத்துபவர்களா ? என அறிய வேண்டும்
பள்ளிவாசலில் 2021ல் தலைவராக பதவிவகித்து நிர்வாக சீர்கோட்டினால் விலக்கப்பட்டவரின் 3 உறவினர்களும் அவரது 2 நண்பர்களுமே இந் நிர்வாகத்தில் டம்மியாக நியமிக்க்ப்பட்டுள்ளனர்..
ஆனால் பள்ளிவாசல்கள் வக்பு சொத்துக்களை நிர்வாக சபை என்பது அவர் 5 முறையும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுபவர், பள்ளிவாசலலோடு தொடர்புடையவர், பொதுச் சொத்துக்கள், வக்பு சொத்துக்கள் பற்றி சிறந்த அறிவும் உள்ளவர், பள்ளிவாசல் சொத்துக்களை நன்கு பராமரிக்க கூடியவர் , நீதி ,நியாயங்கள் அப்பிரதேசத்தில் வாழும் ஏழை மக்கள் பொது விடயங்கள், ஷரிஆ நீதி, தெரிந்தவர் , ஜகாத் விடயங்கள், அறவிட்டு அதனை சிறப்பாக ஏழை எளியவர்களுக்கு உதபுவர் நியாயமாக பங்கிடக்கூடியவர் பள்ளிச் சொத்துக்களை பாதுகாப்பவராகவும அல்லாஹ்வின் அமானிதமாகவும் இருத்தல் வேண்டும்.
 இவ்வாறானவர்களை அப்பிரதேச பள்ளிவாசலில் மாதாந்தம் சந்தாப் பணம் செலுத்தும் முஸ்லிம்கள் இணைந்து பள்ளியில் ஒன்று கூடி நிர்வாக சபையைத் தெரிபு செய்தல் வேண்டும்.
மேலும் இஸ்லாமிய அறிவு, ,, இறைபக்தி, ஒழுக்கமானவர், நீதிமன்றத்தில் குற்றமிளைக்காதவர், தனது பொருள் அறிவு கொண்டு பொதுச் சொத்துக்கும் ஏழைகளுக்கும் உதபுவராகவும் இருத்தல் வேண்டும். சிறந்த ஒழுக்க பண்புடையவராக இருத்தல் வேண்டும்.
ஆனால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் சிபார்சுக் கடிதம் பெற்று இப் பள்ளியின் முன்னால் தலைவரின் தேவைக்கேற்ப உறவினர்கள்,நண்பர்களென 5 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வின் வீடு, சொத்து, அதனை நிர்வகிப்பவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்பட்டு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல்களை எவ்வாறு நிர்வகிக்கும் முறையையும் நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள்….அதில் ஊழல் , நீதியற்ற நியாயங்கள் பொதுமக்களுக்கு அநீதிகள் இருக்கக் கூடாது. நிர்வாகத்தினர் தமது பொருள், சொத்துக்களை . அறிவுகளைக் கொண்டு சிறந்த நிர்வாகத்தினைக் கொண்டு செல்லல் வேண்டும்.
இச் சபையை நியமிக்கும் முஸ்லிம் சமய பணிப்பாளர் அல்லது வக்பு சபை நேரடியாகச் பள்ளிவாசலுக்குச் சென்று பள்ளிவாசல் பிரதேசவாசிகளை பள்ளிக்கு அழைத்து அவர்களிடம் அபிப்பிராயம் கேட்டு பொதுமக்களது நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகூடிய மக்கள் அபிப்பிராயத்தினை பெற்றவரும் சமூகத்தில் மதிக்கத் தக்கவரையே பள்ளிவாசல் நிர்வாக சபையை நியமித்தல் வேண்டும்.
ஏற்கனவே 2020ல் தலைவராக பதவி வகித்தவர் மீண்டும் இப் பள்ளிவாசலில் கால் ஊண்டுவதற்காக அவர் நியமித்த டம்பி சபையே தற்போது நியமனம் பெற்ற சபை என பிரதேச வாசிகள் கூறுகின்றனர்..
மேற்படி தலைவர் பதவி வகித்த காலத்தில் ரத்மலானை பள்ளிவாசலுக்கு அருகில் இல்லாமல் இரு வீட்டை அண்டிய ஒரு காணியை அதி விலைகொடுத்து 4 கோடி ருபாவுக்கு பொதுமக்களிடம் பணம் அறவிடப்பட்டு வாகனத் தரிப்பிடத்திற்காக காணி ஒன்றை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அக் காணியின் உரிமைப் பத்திரத்தில் 2020 ஆண்டு காலப்பகுதியில் இந்தத் தலைவரின் பெயரே பதியப்பட்டு அச் சான்றிதலும் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. அத்துடன் 30க்கும் மேற்பட்ட அப்பிரதேசத்தில் இல்லாதவர்களது சந்தாப் பண வதிவிட பதிகளையும் பொதுமக்கள் காண்பித்தனர்.
இது எவ்வாறு சாத்தியமாகும். வக்பு சொத்து என….ரத்மலானை பள்ளிவாசலுக்குரிய சொத்து என அரச காணிப்பதிவில் பதியப்படவில்லை…..அதனை எழுதிய சட்டத்தரனியும் அதனை எந்த நிலையில் இதனை பதிவிட்டாரோ என்பதுகூட தெரியவில்லை. என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு பல குறைபாடுகள்,..ஊழல்கள் நிறைந்த அந்த முன்னால் தலைவரின் 3 உறவினர்களும் 2 நண்பர்களை மீள ரத்மலானை நம்பிக்கையாளர் சபை உறுப்பினராக முஸ்லிம் சமய பணிப்பாளர் நியமித்துள்ளார்…..இது குறித்து ரத்மலானை வாழும் முஸ்லிம் பிரதேச வாசிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு கடிதமொன்றையும் பணிப்பாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறாக பள்ளிவாசல்களுக்கு சட்டவிரோதமாக நியமனப் பெறும் ஊழல்வாதிகள் சமுகத்திலிருந்து அகற்றப்டல் வேண்டும்.
குறுக்கு வழியில் பதவிகளைப் பெறுபவர்களது பற்றி தீர ஆராய்ந்து நியமனம் வழங்கப்படல் வேண்டும். மீண்டும் சீரற்ற நிர்வாக் சீர்கேட்டுக் வழிவகிக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.என அரச அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றனர்.
.இவ்விடயங்களை பொதுமக்களாகிய நாங்கள் கேட்காவிட்டால் எதிர்காலத்தில் தமது இளைஞர்கள் சிறார்கள் தமது மதக்கடமையைக் குர்ஆன் கற்கைகளைக் கூட செய்ய முடியாமல் நமது வக்பு சொத்துக்களை சூரையாடிவருவார்கள்.

இவா்கள் மறுமையிலும் அல்லாஹ்விடத்திலும் பதில் சொல்லியாக வேண்டும்.

இவ்வாறான ஊழல்வாதிகள் சமுகத்திலிருந்து ஓரங்கட்டப்படல் வேண்டும். நமது சமூகத்தில் உள்ள சிறந்த நீதியான தலைவர்கள் உள்ளவர்களை நாம் இனம்கண்டு தலைமைப்பொறுப்பினை ஏற்பதற்கு முஸ்லிம் சமய தினைக்களம் உதவ முன்வருதல் வேண்டும். நன்கு கற்று அல்லது சிறந்த வர்த்தகர்கள் மத ஆத்மீக அல்லாஹ்விடம் பயம் கொண்ட சிறந்த நிர்வாகிகள் பள்ளிவாசல்களை நிர்வகிக்க முன்வருததல் வேண்டும் என இப்பிரதேச புத்திஜீவிகள் பிரதேச முஸ்லிம்கள் ஊடகவியாலா்களை அனுகி இதனைப் பிரச்சாரப்படுத்துமாறு வேண்டுடிக் கொள்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *