ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது
தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
ரயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம் கோரவிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இன்று(15) 20 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார்.
பெலிஅத்த, காலி, அவிசாவளை, கண்டி, ரம்புக்கனை, அளுத்கம மற்றும் மஹவ ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று(15) மாலை வேளையிலும் சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
வழமையாக நாளாந்தம் சுமார் 45 அலுவலக ரயில்கள் கொழும்பை நோக்கி பயணிப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (15) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளது.