உக்ரைன் மீது புதிய தொடர் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
தலைநகர் கீவில் நள்ளிரவுக்கு பின்னர் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் ட்ரோன் தாக்குதலொன்றில் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தெற்கே Odesa பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, தமது களஞ்சியசாலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக உக்ரைன் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை தோற்கடித்த வெற்றி விழாவை ரஷ்யா கொண்டாடுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களில் சிவிலியன்களின் நிலைகளே இலக்கு வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.