- ரஷ்யாவில் நடைப்பெற்ற சர்வதேச இளைஞர் கீனோ திரைபட விழாவில் நுவரெலியாவை சேர்ந்த ஒனாசியஸ் பர்னாண்டோ இயக்கிய ‘The Tea” குறும்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்த வெற்றி இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் இலங்கை வருகையின் 200 வது வருடத்தில் கிடைப்பெற்றது தமக்கும் சமூதாயத்திற்கும் பெருமை என குறுந்திரைப்பட இயக்குநரான ஒனாசியஸ் பர்னாண்டோ கூறினார்
ச
. ச
இலங்கை குறுந்திரைப்படமான தேத்தண்ணி( the Tea ) முதல் இடத்தைப்பெற்று வெற்றிப்பெற்றது , இதற்கு அனைத்து நாடுகளிலும் 1200க்கு மேற்பட்ட படங்கள் போட்டியட்டன.
விபின் மற்றும் ஷான் பிரசாத் நடித்திருக்கும் இத்திரைபடத்தை ஒனாசியஸ் பர்னாண்டோ இயக்கி இருக்கின்றார், Nitwo பிக்சர்ஸ் தயாரிப்பு நிருவனம் தயாரித்து உள்ளது
தேயிலை தோட்ட தொழிலாளியின் மகனின் வாழ்க்கையும் தேயிலை தோட்ட முதலாளியின் மகனின் வாழ்கை சம்பவங்கலே இக் கதையின் கரு. இரு கதாபாத்திரங்களிலும் விபின் சிறப்பாக நடித்துள்ளார்