கனடாவின் ரொறன்றோ நகரில் வீட்டு விற்பனை குறைவைடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஆறு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ரொறன்றோ பிராந்திய வீடு விற்பனை முகவர்கள் சபை தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக பட்டியிலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 16.5 வீதம் அதிகமாக பதிவாகியது.
எனினும், விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி விலை 1,082,179 டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடமும் இந்த விலைகள் இதே அளவில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.