லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது.

அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *