கௌசல்யா
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேனொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அவரோடு பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை 5. மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிக்கோயாவிலுள்ள கராஜில் வாகனத்தை திருத்தி லிந்துலை மட்டுல்லை தோட்டத்திற்கு செல்லும் போதே வேன் பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் நுவரெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்பதாக பொலிஸார் கூறினர்