ஆசிய கிண்ணத்தின் இறுதி சுப்பர் லீக் போட்டியில் இந்திய கிரிக்கட் அணி பங்காளதேஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இன்று கொழும்ப ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்ற பகல் இரவு போட்டியில் நாணய சுழறசியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி பங்களாதேஸை துடுப்பெடுத்தாட அழைத்தது
ஸ்கோர் விபரம்
பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்கள் ( அணித்தலைவர் சகிப் ஹல் ஹசன 80 ஓட்டங்கள், தௌவீத் 54 ஓட்டங்கள் , நச்ம் ஹகமட் 44 ஓட்டங்கள் பந்த்வீச்சில் தக்கர் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள்)
வெற்றி இலக்கான 266 பெறும் நோக்கில் ஆடுக்களம் நுழைந்த இந்திய அணி 49.5 ஓவர்களிில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதில் கில் 121 ஓட்டங்கள், அக்ஸர் பட்டேல் 42 ஓட்டங்கள் பந்து வீச்சில் முஸ்தபூர் ரஹ்மான். 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள்.
பங்களாதேஸ் புலிகளிடம் இன்று தோல்வியை தழுவிய இந்திய அணி இலங்கை சிங்கங்களுடன் வெற்றிப்பெறுமா?