பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இந்த ஹர்த்தால் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு – கிழக்கு ஹர்த்தால் இயக்கம் காரணமாக அந்த பகுதிகளில் தனியார் பேருந்துகளும் தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பொது முடக்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு பல பொது அமைப்புக்களும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆதரவு கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.