புன்னகைக்கு பதிலாக கண்ணீரையும் ஜனநாயகத்திற்கு பதிலாக பயங்கரவாதத்தையும் ஒடுக்கு முறைகளையும் மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ள நிலையில் இம்முறை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.
நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கை அதள பாதாளத்திற்கு தள்ளப்படுவதுடன் பெரும்பாலான மக்களுக்கு தொழில் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைவாதம், இனவாதம், பயங்கரவாதமற்ற சிறப்பான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு சக்தியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் வலுவான முகாமை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.