அஸ்ரப் அலீ
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இரண்டாவது தினமான நேற்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்நிரம்பிய குழியொன்றுக்குள் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.
மாணவர்கள் விழுந்ததை அவதானித்த பிறிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர், பல்கலைக்கழக மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரு மாணவர்களும் வவுனியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14வயது மற்றும்,15வயதுடைய மாணவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.