டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாத்தாண்டிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.