விஷால் , எஸ் ஜே .சூர்யா நடிப்பில் வெளிமான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
நீண்ட நாளைக்கு பிறகு விஷால் திரைப்படம் வெற்றிப்பெற்றிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
மார்க் ஆன்டனி கதை விமர்சனம்
ஆராய்ச்சியாளரான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த போன் மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஒருநாள் கிளப்பில் இருந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு செல்வராகவன் இறந்து விடுகிறார்
இந்த டைம் டிராவல் போன் மெக்கானிக்காக இருக்கும் விஷால் (மார்க்) கையில் கிடைக்கிறது. தன்னுடைய அப்பா விஷால் (ஆண்டனி) தான் அம்மாவை கொன்றான் என்றும், அவன் மிகவும் மோசமானவன் என்றும் எஸ்.ஜே.சூர்யாவை (ஜாக்கி பாண்டியன்) அப்பாவாக நினைத்து வாழ்ந்து வருகிறார் விஷால்.
இந்நிலையில் டைம் டிராவல் போனை வைத்து தன் அம்மாவை மரணத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார் விஷால். இந்த முயற்சியில் தன் தந்தை நல்லவர் என்று தெரிந்துக்கொள்கிறார். மேலும் தன் தந்தையை கொன்றது எஸ்.ஜே.சூர்யா (ஜாக்கி பாண்டியன்) என்றும் தெரிந்துக் கொள்கிறார். இதனால் தன் தந்தையை காப்பாற்றி நிகழ் காலத்திற்கு கொண்டு வர விஷால் முயற்சி செய்கிறார் விஷால்
இறுதியில் விஷால் தன் தந்தையை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாரா? டைம் டிராவல் போனால் வேற என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நன்றி மாலை மலர்