வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் என்ற 30 வயதான இளம் குடும்பஸ்தரே குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறையில் மாவடிச்சேனையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அயல்வீட்டாருக்கு பனை ஓலை வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறியுள்ளார்.
அவ்வேளை பனை மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் கொட்டியுள்ளன.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலையில் மாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
K.k