மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திரரேகா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக ” வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்” ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை ) எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்ற உள்ளார். கோகிலம் சுப்பையா அவர்களின் சமூக – இலக்கிய வாழ்க்கைக் குறித்த குறிப்பையும் உரையாளர் பற்றிய அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்க உள்ளார்.
இம் மகளீர் தின விழாவில் அடையாளம் காணப்பட்ட பெண் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
நீலமேகம் பிரசாந்த்