(க.கிஷாந்தன்)

ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது.

 

இந்த கையளிப்பு நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், அட்டன் சாரதி சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக  இ.தொ.கா வின் தவிசாளரும்,பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் விசேட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கமைய அட்டன் டிக்கோயா நகர சபையின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஹட்டன்  பஸ் தரிப்பிடமானது குன்றும், குழியுமாகவே காணப்பட்டது. மழைகாலங்களில் பஸ் தரிப்பிடத்தில் நீர் தேங்கி இருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் பஸ் தரிப்பிடத்தை புனரமைத்துதருமாறு மக்கள், சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும்,நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனிடமும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன்பிறகு, பஸ் தரிப்பிட நிலைய வீதி மற்றும் வடிகாலமைப்பு ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *