ராமு தனராஜா
ஹப்புத்தளை பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர் விடுதி உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் ஹபுத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா