ஆசிய கிண்ண 2023 கிரிக்கட் தொடரின் சுப்பர் லீக் போட்டியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.
பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுகிடையில் லாகூரில் இன்று பகல் இரவு சர்வதேச ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்காளாதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
கடந்த போட்டிகளை போன்று இன்றும் திறமையாக ஆடலாம் என நினைத்த பங்களாதேஸ் அணி தனது முதல் நான்கு விக்கட்டுகளையும் 47 ஓட்டங்களை பெற்ற போது இழந்தது.
ஆயினும் அணித்தலைவர் சஹிப் உல் ஹசன் , முஸ்பகீர் ரஹ்மான் ஆகியோர் இணைந்து அணியின் ஒட்டங்களை 147 ஓட்டங்கள் வரை கொண்டு சென்றனர். இதில் சஹிப் அல் ஹசன் 53 ஓட்டங்களை எடுத்தார்.
ஆனாலும் அதன் பின்னர் பாகிஸ்தானிய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது அணியின் ஏனைய வீரர்கள ஆட்டமிழந்தனர்
பங்களாதேஸ் அணி 38 .4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 193 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதில் முஸ்பகீர் ரஹ்மான் 64 ஓட்டங்களை எடுத்தார்.
வெற்றி இலக்கான 194 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து பெற்று விக்கெட்டுகளால் 7 வெற்றிப்பெற்றது.
இதில் இனாமூல் ஹக் 74 ஓட்டங்களையும் மொகமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ஸ்கோர் விபரம்
பங்களாதேஸ் அணி 38.4 ஓவர்களில் 193 ஓட்டங்கள் முஸ்பகீர் ரஹ்மான் 64 சகீப் ஹல் ஹசன் 53 ஓட்டங்கள் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் ரவூப் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள், நஸிம் ஷா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்.
பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்கள்.
இனாமூல் ஹக் 78 ஓட்டங்கள் மொகமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்கள்