நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வௌியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு
காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய, யக்கலமுல்ல பிரதேச செயலக பிரிவுகள்
கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றம்புக்கனை, தெரணியகலை, மாவனெல்லை, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலக பிரிவுகள்
குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம, அலவ்வ, பொல்கஹவெல பிரதேச செயலக பிரிவுகள்
மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.