நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைய செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த தேசிய பௌதீக திட்டம் தொடர்பான வரைவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைய நாட்டில் நெடுஞ்சாலைகள் உட்பட பல அடிப்படை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.