புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இன்றும் சில விசேட புகையிரதகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மற்றும் காலை 6.30 க்கும், பதுளையில் இருந்து கோட்டை வரை மாலை 5.20 மற்றும் காலை 7.00 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *