சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரம் அலீ
நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை ஊழியர்கள் சுகாதார அமைச்சின் முன்பாக தற்போதைக்கு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்கள்
கடந்த 2014ம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை ஊழியர்களுக்கு இதுவரை உரிய முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது
சில மாதங்களில் ஊதியத்தில் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி அவர்கள் தற்போது சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்
ஆர்ப்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.