14 வயதுடைய செர்பிய மாணவர் ஒருவர் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 மாணவர்களும் பாடசாலை காவலரும் கொல்லப்பட்டனர்.
செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.
மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.