சிங்கப்பூரின் 9 வது ஜனாதிபதியாக இலங்கைத்தமிழ் வம்சத்தவரான தர்மன் சண்முகரத்தினம் தெரிவி செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் ,துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரது தாய் மற்றும் பேரனார் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தர்மன் சண்முகரத்னம் – 70.40% (1,746,427 வாக்குகள்) பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் – 15.72% (390,041 வாக்குகள்), டான் கின் லியான் – 13.88% (344,292 வாக்குகள்) பெற்றுத தோல்வியடைந்துள்ளனர்.ர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மன் சண்முகரத்னம், தமக்கும் தமது கொள்கைகளுக்கும் கிடைத்துள்ள வாக்குகள், சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள “நம்பிக்கை வாக்குகள்” என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும், சிங்கப்பூர் மக்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (வயது 66) மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை ஆய்வுப் பட்டம் முடித்தார். சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை திருமணம் செய்தார்.

சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள இலங்கைத்தமிழ் வம்சத்தவரான தர்மன் சண்முகரத்தினம் அவர்களுக்கு எம்  வாழ்த்துக்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *