எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை மலையக மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரரும், LJEWU பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் முன்னணி ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளா
(மலையக தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. மலையக மக்கள் இன்று வரை அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்று வருகின்றனர. மாறாக எவரும் தட்டில் வைத்து கொடுக்கவில்லை.
இன்று தோட்ட காணிகள் முறையாக பராமறிக்கப்படுவதில்லை. அதனால் பாம்பு, சிறுத்தை, குளவி உள்ளிட்ட மிருகங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. நாட்டின் வருமானத்தை சுமக்கும் எம்மவர்களை எவரும் கண்டுக்கொள்வதில்லை.
இந்தியா வீடுகளை அமைத்துக் கொடுத்து அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசிடம் பெறுமாறு கோரியும் அதற்கு இதுவரை எவரிடம் இருந்தும் பதில் இல்லை.
எனவே எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை மலையக மக்கள்தமது உரிமைகளையும், இருப்பையும் பாதுகாத்துக்கொள்ள பாவிப்பது அவசியம்.. மலையக இளம் சமூகத்திற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.) என்றார்;