பிரித்தானியாவில் பொது தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் 2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.டெலிகிராப் பத்திரிக்கை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
2024ல் பொது தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த முக்கிய முடிவை எடுக்க ரிஷி சுனக் நினைப்பதாக கூறப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் உயர் பணவீக்க விகிதத்தில் எதிர்பார்த்ததை விட மெதுவான வீழ்ச்சி, வரிக் குறைப்பைத் தடுக்காது என்று அரசாங்க அதிகாரிகள் நம்புவதாக டெலிபிராப் தெரிவித்துள்ள போதிலும் அதன் ஆதாரங்களை மேற்கோள் காட்டவில்லை.
பரிசீலனையில் உள்ள வரி குறைப்பு அறிவிப்புகள் பிரித்தானியாவின் தேசிய காப்பீட்டு சமூக பாதுகாப்பு அமைப்பு அல்லது தனிநபர் வருமான வரிமூலம் அறிமுகப்படுத்தப்படலாம்.
பிரித்தானியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.